மணிரத்னம்
Tamil Cinema Lovers தளத்திலிருந்து
நவீன தமிழ் திரைப்படத்தின் முன்னோடியாக விளங்குபவர் மணிரத்னம். இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிர வாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ.ஆர்.ரகுமான் என்ற பிரபலமான இசையமைப்பாளரை அறிமுகம் செய்தவர்.
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்,
இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை.
[தொகு] பட்டியல்
மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்:
- பல்லவி அனுபல்லவி (கன்னடா - 1983)
- உணரு (மலையாளம் - 1984)
- இதய கோவில் - 1985
- பகல் நிலவு - 1985
- மௌன ராகம் - 1986
- நாயகன் - 1987
- அக்னி நட்சத்திரம் - 1988
- இதயத்தை திருடாதே (தெலுகு) - 1989
- அஞ்சலி - 1990
- தளபதி - 1991
- ரோஜா - 1992
- திருடா திருடா - 1993
- பம்பாய் - 1995
- இருவர் - 1997
- உயிரே (ஹிந்தி) - 1998
- அலைபாயுதே - 2000
- கன்னத்தில் முத்தமிட்டால் - 2002
- யுவா (ஹிந்தி) - 2004
- ஆய்த எழுத்து - 2004
[தொகு] சுட்டிகள்
| This page uses Creative Commons Licensed content from Wikipedia (view authors). |
|

